Search the blog

Custom Search

முஸ்லிம்கள்



நெருக்கடி காலங்களில் இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைபாடு எடுத்தார்கள். எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். 

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும். 

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாடு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லு. இறை பக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் உரிமை மீறல்களையும், ரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்த வித அச்சமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மது (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் அவர்கள் பயங்கரமாக எதிர்த்தது ஏன்?

முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத் தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சிகிறார்கள். 

மக்காவுக்கு சிறுது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டமாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையில் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எழும்பைக் கொண்டு எதிரிகளை தாக்கினார்கள். 

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுத்துவதற்கு காரணமாகிவிடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையை திறந்து கொடுக்கும்.

அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சி எடுத்துதார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும், கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்து கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி குர்ஆனை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி இந்த வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிடக்கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்கு கட்டளை பிறப்பித்தான்,

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (அல் குர்ஆன் - 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்கள் அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள். 

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளியும் விட்டுவிடக் கூடாது, எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இதுதான் முஸ்ளிம்களின் நிலைபாடாக இருக்கவேண்டும்.

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...