Search the blog

Custom Search

சென்னையில் நாளை மே 28 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


posted by Bsi Gani


நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டங்களை சுமத்தி சிறையில் அடைப்பதும், அவர்களை கொலைச் செய்வதும் தொடர்கிறது. சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் நிரபராதி என்று நிமேஷ் கமிஷன் தெரிவித்த காலித் முஜாஹித் போலீஸ் கஸ்டடியில் மர்மமாக கொலைச் செய்யப்பட்டார். 


எனவே இது தொடர்பாக தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஜி தாராபுரி கூறிய தகவல்களுக்கு மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் ,பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனவும்,யு.ஏ.பி.ஏ, அப்ஸா, மோக்கா போன்ற கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி) இந்தியா முழுவதும் குறிப்பாக டெல்லி, மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கேரளா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறது. 


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் மே 28 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.மாநில தலைவர்,கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில செயலாளர் டி.ரெத்தினம் அண்ணாச்சி ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள். 


நீதிக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு நீதிக்காக குரல் கொடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

கண்டண ஆர்ப்பாட்டம் 

28.05.2013 மாலை 4 மணி அளவில் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,சென்னை 

கண்டன உரை: 

கே.கே.எஸ்.எ.தெஹ்லான் பாகவி-மாநில தலைவர் 

டி.ரெத்தினம் அண்ணாச்சி-மாநில செயலாளர் 

இப்படிக்கு 

B.S.I.கனி, 

மாநில பொறுப்பாளர் 

செய்தி ஊடகத்துறை 

எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...